வணிகம்

வருமான வரியில் எவ்வளவு தொகை ரீஃபண்ட் - வருமானவரித்துறை விளக்கம்

வருமான வரியில் எவ்வளவு தொகை ரீஃபண்ட் - வருமானவரித்துறை விளக்கம்

Sinekadhara

கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமானவரியை திருப்பி செலுத்தியது நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,83,000கோடி ரூபாய் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 2,09,00,000 பேர் வருமானவரி செலுத்தியுள்ளனர். இதில், கூடுதலாக வரி பிடிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 1,83,579 கோடி ரூபாயை திரும்ப செலுத்தியுள்ளதாக நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தனிநபர்களுக்கு 65,938 கோடி ரூபாயும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1,17,000 கோடி ரூபாயும் ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.