ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
தற்போது டெலிகாம் சேவைகளுக்கு 15 சதவிகித வரி இருக்கிறது. ஆனால் ஜிஎஸ்டியில் டெலிகாம் சேவைக்கு 18 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் ரீசார்ஜ் மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் கூறும்போது, தொலைத்தொடர்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித வரியால் நிச்சயம் பொதுமக்களின் மொபைல் ரீசார்ஜ் பில் உயரும் என தெரிவித்துள்ளது.
உதாரணத்திற்கு தற்போது உங்களுக்கு 1000 ரூபாய்க்கு மொபைல் பில் வருகிறது என்றால் இதுவரையில் 150 ரூபாய் வரியுடன் சேர்த்து கட்டி இருப்பீர்கள். தற்போது அது 18 சதவிதமாவதால், 180 ரூபாய் கட்ட வேண்டி வரும். இதே போல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ரீசார்ஜ் கட்டணம் உயரும்.