வணிகம்

7 நாட்கள் சிறப்பு விற்பனையில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்ற எம்ஐ நிறுவனம்

Veeramani

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் ஆகிய ஆன்லைன் விற்பனை தளங்களில் ஏழு நாள் பண்டிகை விற்பனையின் போது 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக எம்ஐ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டிகைகால விற்பனையின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21  ஆம் தேதிவரை அமேசான், ஃபிளிப்கார்ட், எம்ஐ .காம் தளங்கள் மூலமாக சிறப்பு விற்பனை நடைபெற்றது. இது  15,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருந்தது, இதனால் வணிகம் இரட்டிப்பாக்கியுள்ளது என்று எம்ஐ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது." இந்த பண்டிகை காலம் எங்களுக்கு மிகப்பெரிய ஷாப்பிங் சீசனாக இருந்தது" என்று எம்ஐ இந்தியாவின் தலைமை  நிர்வாக அதிகாரி ரகு ரெட்டி கூறினார்.

எம்ஐ பிராண்டின் பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போனான எம்ஐ 10, பண்டிகை காலங்களில் முறையே ரூ .44,999 மற்றும் ரூ .49,999 ஆகிய இரண்டு வகைகளில் கிடைத்தது. பிரபலமான நோட் சீரிஸ் - ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் – கூடுதலாக ரூ .1000 தள்ளுபடியில் கிடைத்தது, ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ .1,500 வரை கூடுதல் தள்ளுபடியுடன் வழங்கப்பட்டன. முன்னதாக, கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த துர்கா பூஜா கொண்டாட்டத்தின் போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கை "தி ரே ஆஃப் ஹோப்" என்ற பெயரில் அமைத்து எம்ஐ இந்தியா புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தது.