”பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் மூலம் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி கொள்முதல் உள்பட நிறைய செய்திருக்கலாம்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், ட்விட்டரில் பிரியங்கா காந்தி தனது கருத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 2 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக வசூலித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொகையில் நாடு முழுமைக்கும் 67 ஆயிரம் கோடியில் தடுப்பூசியும், 718 மாவட்டங்களில் ஆக்சிஜன் ஆலைகளும், 29 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையும், 25 கோடி ஏழைகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்குதலும் செய்திருக்கலாம் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.