வணிகம்

இந்தியாவில் அறிமுகமானது 2022 மாருதி சுஸுகி பலேனோ: சிறப்பம்சங்கள்!

EllusamyKarthik

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மாருதி சுஸுகி நிறுவனம். இந்த நிறுவனத்தின் 2022 பலேனோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்புபோலவே சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என நான்கு வேரியண்ட்டுகளில் இந்த 2022 கார் அறிமுகமாகியுள்ளது. 

“ஆட்டோமொபைல் தொழில் துறையில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 5 மாடல் கார்களில் பலேனோவும் ஒன்று. இந்தியாவில் மட்டுமே பலேனோவை சுமார் 1 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 100 நாடுகளில் இந்த கார் அதன் செயல்திறனுக்காக பாராட்டை பெற்றுள்ளது. புதிய நியூ ஏஜ் பலேனோ எதிர்காலத்தை நோக்கிய எங்களது புதிய அணுகுமுறையாக இருக்கும்” மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் Kenichi Ayukawa தெரிவித்துள்ளார். 

இந்த புதிய பலேனோவின் டிசைனை பொறுத்தவரையில் பெரிய அளவில் முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது இல்லை என சொல்லலாம். இருந்தாலும் புதிய ரேடியேட்டர் கிரில், ஸ்போர்ட்டியர் ஃப்ராண்ட் பம்பர், LED DRL உடன் கூடிய LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப் கிளஸ்டர், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 5-MT/AGS கியர்பாக்ஸ், 88.5 bhp பவர், 113 Nm டார்க், ரிவர்ஸ் சென்சார், ABS, டியூயல் ஃப்ராண்ட் ஏர்பேக்ஸ், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் மாதிரியானவை இதில் உள்ளது. 

ஆறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 6.35 லட்சம் ரூபாயில் தொடங்கி 9.49 லட்சம் ரூபாய் வரை உள்ளது.