மாருதி சுசூகி கார் நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்தி அறிவித்துள்ளது.
மாருதி கார்கள் விலை, குறைந்தபட்சமாக 1,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 14 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் கூலி உயர்வு ஆகிய காரணங்களால் கார்களின் விலையை உயர்த்துவது தவிர்க்க இயலாததாகி விட்டதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.