வணிகம்

டீசல் செக்மெண்ட் உற்பத்தியில் இருந்து தள்ளி நிற்க மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் முடிவு!

EllusamyKarthik

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் டீசல் செக்மெண்ட் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இருந்து தள்ளி நிற்க முடிவு செய்துள்ளது. டீசல் கார்களுக்கு உள்ள வரவேற்பு இந்தியாவில் குறைந்து வருவது இதற்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் வரும் 2023-இல் இந்தியாவில் அமலாக உள்ள வாகன புகை மாசுக் கட்டுப்பாட்டு விதிகளில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்களும் இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. 

“இப்போதைக்கு டீசல் செக்மெண்ட் வாகனங்களை உற்பத்தி செய்வதாக இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் டீசல் வாகனங்களுக்கு டிமெண்ட் இருந்தால் நிச்சயம் அதில் கம்பேக் கொடுப்போம். வரும் 2023-இல் அமலுக்கு வர உள்ள வாகன புகை மாசுக் கட்டுப்பாட்டு விதி, இந்த டீசல் செக்மெண்ட் வாகனங்களின் விலையை அதிகரிக்க கூடும். 

அதே நேரத்தில் எரிபொருள் சிக்கனத்துடன் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். கூடவே CNG ஆப்ஷனுடன் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்போது எங்களது 15 மாடல்களில் 7 மாடல்கள் CNG ஆப்ஷனை கொண்டுள்ளது” என PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் மாருதி சுஸுகி இந்தியாவின் தலைமை டெக்னிக்கல் அதிகாரி சி.வி.ராமன்.