வணிகம்

மஹிந்திராவின் அப்டேட்டட் வெர்ஷனான தார் ஜீப் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது 

EllusamyKarthik

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.யூ.வி ரக ஜீப்பான தாரின் அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. 

இந்த புதிய மாடல் ஜீப் வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தார்  ஜீப் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

"புதிய தார் ஜீப்பை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் வரலாற்றை மீண்டும் ஒரு முறை மாற்றி எழுதி உள்ளோம். இந்த மாடல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்பேர்ஸ் கூட உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை தான்" என மகேந்திராவின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

மாற்றத்தக்க ரிமூவபிள் ரூஃப் டாப் பேனல், வாஷபள் இண்டீரியர்கள் என தனித்தன்மையில் அசத்துகிறது புதிய தார். ஆன் ரோட் மற்றும் ஆஃப் ரோட் என இரண்டு வித பயணங்களுக்கும் இதை பயன்படுத்தலாம். 

6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷனில் தார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  முதலே  புதிய  தார் ஜீப்புக்கான புக்கிங்கும் ஆரம்பமாக  உள்ளது.