பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்து, மல்லியின் விலை கிலோ இரண்டாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் சாதரண மக்கள் மல்லிகைப்பூவை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி மார்க்கெட்டிற்கு பல மாவட்டங்களிருந்து மல்லிகைப்பூ கொண்டு வரப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும். தற்போது ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் மதுரை மல்லி கடும் பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைவாகி மதுரை மல்லிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மதுரை மல்லியின் விலை கிலோ 2000 ருபாய் அளவு விலை ஏற்றம் கண்டுள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் மல்லிகைப்பூ தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டபடியால் சாதரண மக்கள் மதுரை மல்லியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் பூ வியாபாரிகளும் மதுரை மல்லி கிடைக்காமல் கிலோ 600 ருபாய்க்கு விற்ககூடிய மெட்ராஸ் மல்லியை வாங்கி நிலைமையை சமாளித்து வருவதாக கூறியுள்ளனர்.