மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 32 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதையடுத்து மானிய சிலிண்டரின் விலை சென்னையில் 31 ரூபாய் 41 காசு அதிகரித்து 466 ரூபாயாக விற்கப்படுகிறது. மானிய சிலிண்டர் விலை இவ்வளவு அதிகரிக்கப்படுவது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. ஜிஎஸ்டியில் மானிய சிலிண்டருக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இதோடு சர்வதேச சந்தை விலை நிலவரமும் கணக்கிடப்பட்டு 32 ரூபாய் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கிடையில் மானியத்துடன் கூடிய சிலிண்டருக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.