காப்பீடு பாலிசிக்கான சந்தாவை இனி கட்டணமில்லாமல் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் அட்டை மூலம் சந்தா செலுத்துவதற்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக எல்.ஐ.சி குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள எல்.ஐ.சி, பாலிசியை புதுப்பித்தல், சந்தா செலுத்துதல், கடன் மற்றும் கடன் வட்டியை திரும்பச் செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணமில்லாமல் செலுத்தலாம் எனக் கூறியுள்ளது. அனைத்து எல்.ஐ.சி வசூல் மையங்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.