வணிகம்

'சில நிபந்தனைகள் உண்டு' - வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ்

நிவேதா ஜெகராஜா

வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைதத்து எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ். 6.90 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 6.66 சதவீதமாக எல்.ஐ.சி. குறைத்துள்ளது.

ஏற்கெனவே பல வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஏழு சதவீதத்துக்கு கீழான வட்டியில் வீட்டுக் கடன் வழங்கி வருவதும், கவனிக்கத்தக்கது.

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனானிஸின் இந்தக் குறிப்பிட்ட குறைந்த வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்குமே கிடைக்கும். மேலும், 50 லட்ச ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்கப்படும். அதேபோல, சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தக் கடன் வழங்கப்படும் என எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் அறிவித்திருக்கிறது.

நிறுவனம் இந்த வட்டி விகிதத்தை அறிவித்திருந்தாலும் அனைவருக்கும் இதே விகிதத்தில் கிடைக்காது. ஒவ்வொவரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்பவே கடன் கிடைக்கும். 800 புள்ளிகளுக்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் இதுபோல குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

பஞ்சாப் சிந்த் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி மிகவும் குறைந்தபட்சமாக 6.65 சதவீத வட்டியை நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்கடுத்து எஸ்பிஐ வங்கி 6.70 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை மிகவும் குறைந்தபட்சமாக 6.75 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன.