உலக அளவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது இந்திய சந்தைதான். இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ‘லாவா’ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ‘அக்னி 5ஜி’ மூலம் நெருப்பை பற்ற வைத்துள்ளது.
அக்னி 5ஜி கடந்த 2021, நவம்பர் மாதம் சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரடி ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது லாவா. அதன்படி சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ரியல்மி நிறுவனத்தின் 8S 5ஜி போனை வைத்துள்ள பயனர்கள் தங்களிடம் அதனை கொடுத்துவிட்டு அக்னி 5ஜி போனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. அதற்கென பிரத்யேக எக்ஸ்சேஞ்ச் விண்டோ ஒன்றும் தொடங்கி இருந்தது லாவா. முன்னதாக ஜனவரி 3 முதல் 7-ஆம் தேதி வரையில் இந்த எக்ஸ்சேஞ் லைவில் இருக்கும் என லாவா தெரிவித்திருந்தது.
அதுவும் இந்தியா, சீனா என இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பீட்டை முன்வைத்து “நான் இந்தியன். ஆனால் நான் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சீனாவுடையது” என சொல்லி இந்த ஆஃபரை லாவா முன்வைத்தது.
இந்த நிலையில் பலரும் அதன் மூலம் தங்களிடமிருந்த ரியல்மி நிறுவன போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய பதிவு செய்தனர். இந்த நிலையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கான பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது லாவா.
லாவா அக்னி 5ஜி சிறப்பம்சங்கள்!
மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட், 64 MP+5 MP+2 MP+2 MP கேமரா, 6.78 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 30W சார்ஜர், 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் மாதிரியானவை இந்த போனில் உள்ளது. இந்த போனின் விலை 19,999 ரூபாய்.