வணிகம்

‘E - Duke’ எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியுள்ள கே.டி.எம்

EllusamyKarthik

ஆஸ்திரிய நாட்டு பைக் உற்பத்தி நிறுவனமான கே.டி.எம், எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்துள்ளது. E-Duke என்ற பெயரில் இந்த பைக் தயாராகி வருகிறது.  

இந்த எலக்ட்ரிக் டியூக் பைக்கில் 10 கிலோவாட் மோட்டார் இருக்கலாம் எனத் தெரிகிறது. 5.5 kWh பேட்டரி பேக் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த செக்மெண்ட் வாகனங்களில் கே.டி.எம் அதிக பேட்டரி பேக் கெப்பாசிட்டி கொண்ட வாகனமாக இருக்கும் எனவும் தெரிகிறது. தற்போது இந்த செக்மெண்டில் வெளிவந்துள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் 4.8kWh and 3.97kWh பேட்டரி பேக் மட்டும் கொண்டுள்ளன. 

இதற்காக பஜாஜ் ஆட்டோ மற்றும் கே.டி.எம் நிறுவனம் இணைந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.