வணிகம்

விரிவாக்க பணிகளுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் காமராஜர் துறைமுக நிறுவனம் விண்ணப்பம்

Veeramani

துறைமுகத்திற்கான விரிவாக்க பணிகளுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் காமராஜர் துறைமுக நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி காமராஜர் துறைமுக நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் கையாள்வதற்கு இந்த விரிவாக்கத்திற்கான அனுமதி தேவைப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் மீது டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துகிறது. ஏற்கனவே காட்டுப்பள்ளி பழவேற்காடு பகுதிகளில் அனல் மின் நிலைய துறைமுக விரிவாக்க பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது காமராஜர் துறைமுகத்திற்கு விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது