சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.92 ஆயிரம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிவிக்கப்பட்ட முதல் மாதத்திலேயே 92,283 கோடி வசூலாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். ஜூலை மாதத்தில் மத்திய மற்றும் மாநில வரிகளுக்கான வசூல் இலக்கு ரூ.91 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி வரி வசூலாகி இருப்பதாகவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துபவர்களில் 72.33 சதவீதம் பேர் இதுவரையில் ஜிஎஸ்டிக்கு மாறியுள்ளனர் எனவும் அருண் ஜேட்லி கூறினார்.