வணிகம்

ஏர்டெல் வோடபோன் வரிசையில் ப்ரீபெய்ட் கட்டணத்தை 21% உயர்த்தும் ஜியோ நிறுவனம்

EllusamyKarthik

ஏர்டெல் மற்றும் Vi (வோடபோன் ஐடியா) டெலிகாம் நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் சேவை கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 முதல் 21 சதவிகிதம் வரை ப்ரீபெய்ட் சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஜியோ. 

இதனை ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அளவில் மலிவான விலை மூலம் டேட்டா புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஜியோ தனது சேவை கட்டணத்தை உயர்த்திய பிறகும் கூட போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை மலிவாகவே உள்ளது. விலையை உயர்த்தியதற்கு பின்னர் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை 91 ரூபாயாகவும், அதிகபட்ச தொகை 2879 ரூபாயாகவும் உள்ளது.