வணிகம்

ஜியோவின் ’தண் தணா தண்’ தீபாவளி ஆஃபர்

ஜியோவின் ’தண் தணா தண்’ தீபாவளி ஆஃபர்

webteam

தீபாவளியை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ 100 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் என பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.    

ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் சலுகையில் ரூ.399  ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ஆஃபர், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்பில் 8 தள்ளுபடி கூப்பன்களாக வழங்கப்படும் எனவும், அதன் பின்பு இந்த சலுகையை அடுத்த ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த அதிரடியான தீபாவளி கேஷ்பேக் ஆஃபர் நேற்று முதல் வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது  இருக்கும் ஜியோ பிளானில் சலுகைகளை அனுபவித்து வந்தாலும், ரூ.399 புதிய தண் தணா தண் ஆஃப்ரில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போதைய பிளான் முடிவடைந்ததும் புதிய தீபாவளி பிளான் தொடங்கிவிடும் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும் ரூ.399 ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 84-நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.