பணப்பரிமாற்றம் செய்வதற்கான தகுதிகளை நிரூபிக்க, ரிசர்வ் வங்கி கால அவகாசம் கொடுத்துள்ளதால் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஜியோ பேங்க் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ பேமன்ட் பேங்க், 70:30 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளது. இந்த வங்கி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணப்பரிமாற்றம் செய்வதற்கான தகுதிகளை நிரூபிக்க ரிசர்வ் வங்கி கால அவகாசம் கொடுத்துள்ளதால் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் ஜியோ பேங்க் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கி வசதியை, 4ஜி வசதி கொண்ட ஜியோ ஃபோன்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட ஜியோ ஃபோன்களின் விநியோகம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.