வணிகம்

‘2020ஆம் ஆண்டும்.. ரூ.2020 பேக்கேஜும்..’ - ஜியோவின் புத்தாண்டு ஆஃபர்..!

webteam

2020ஆம் ஆண்டு வருகையை முன்னிட்டு ஜியோ தனது வாடிக்கையாளர்கள் ரூ.2020 பிளான் ஆஃபரை அறிவித்துள்ளது.

புத்தாண்டு வருகையை முன்னிட்டு அனைத்து வியாபார நிறுவனங்களும் ஆஃபர்களை வீசி வாடிக்கையாளர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்துள்ளன. ஆஃபர்கள் என்றாலே அதிரடி காட்டும் ஜியோவின் புத்தாண்டு ஆஃபரை எதிர்நோக்கி அதன் வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், ஜியோ தனது 2020ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ஆஃபரை வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ரூ.2020 விலையில் தனது ஒரு வருடத்திற்கான பிளான் ஆஃபரை ஜியோ அறிவித்துள்ளது.

ரூ.2020 ஆஃபரின் சிறப்பம்சங்கள் :

நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா விதம் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்

ஜியோ சிம்மிலிருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு அன்லிமிடெட் போன் கால்கள் பேசிக்கொள்ளலாம்

ஜியோ சிம் கார்டுகள் அல்லாத மற்ற சிம் நெட்வொர்க்குகளுக்கு 12000 நிமிடங்கள் இலவசமாக போன் கால்கள் பேசலாம் (அதன்பிறகு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும்)

நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பிக் கொள்ளலாம்

ஜியோ செயலியை ஒரு வருடத்திற்கு இயக்கிக் கொள்ளலாம்

ஜியோ போன் பயன்படுத்தும் ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் பிரத்யேக சலுகை :

ஜியோ போன் பயன்படுத்தும் ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் ரூ.2020க்கு ரிசார்ஜ் செய்தால், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படும்.

அதேசமயம் தினந்தோறும் 0.5 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும்.

மற்றபடி அனைத்தும் வசதிகளும் ஒன்றுதான்.

இந்த ரூ.2020 பிளான் ஜியோவின் புதிய பேக்கேஜ் ஒன்றும் அல்ல. ஏற்கனவே இதே பேக்கேஜ்ஜை ரூ.2,199 ஜியோ வழங்கி வந்தது. தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரூ.2,199 என்ற விலையை ரூ.2020க்கு குறைத்திருக்கிறது.