தவறான வழிகாட்டும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதாக ஏர்டெல் நிறுவனம் மீது தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான ட்ராயிடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்டணமற்ற சேவை என்ற பெயரில் ஏர்டெல் செய்து வரும் விளம்பரங்களில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது. 345 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா அழைப்பு என்று விளம்பரம் கூறும் நிலையில், ஒரு நாளில் 300 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ரிலையன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.