ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ்.யு.வி. ரக ஜீப் காம்பஸ் காரினை குறுகிய காலத்தில் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜூலை 31-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் காருக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜீப் கேம்பஸ் காருக்கான முன்பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு தொடங்கிய 75 நாட்களுக்குள் இதுவரை 10 ஆயிரம் கார்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 92 ஆயிரம் பேர் கார் குறித்து விசாரித்துள்ளனர். ஜீப் காம்பஸ் காரின் தொடக்க விலை ரூ.14.95 லட்சம் ஆகும். இந்த கார் ரூ.20.65 லட்சம் வரை பல்வேறு ரகங்கள் உள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கெவின் பிளைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் கேம்பஸ்-க்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது. முன் பதிவு செய்தவர்களுக்கு கூடிய விரைவில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.