வணிகம்

எல்ஐசி புதிய பங்கு வெளியீடு - ஐஆர்டிஏஐ ஒப்புதல்

எல்ஐசி புதிய பங்கு வெளியீடு - ஐஆர்டிஏஐ ஒப்புதல்

கலிலுல்லா

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் புதிய பங்கு வெளியீட்டிற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒப்புதல் வழங்கியுள்ளது.

பங்கு வெளியீட்டில் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி திரட்ட எல்ஐசி திட்டமிட்டுள்ள நிலையில், அதன் பங்கு பட்டியலிடும்போது இரண்டரை மடங்கு விலை உயர்ந்து சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டிலேயே, அதாவது மார்ச் இறுதிக்குள் பங்கு வெளியீடுக்கான பணிகளை எல்ஐசி மேற்கொண்டு வருகிறது. IRDAI ஒப்புதலைத் தொடர்ந்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி-யிடம் எல்ஐசி விண்ணப்பிக்க உள்ளது.