வணிகம்

ரயில் டிக்கெட் ஆன்லைன் புக்கிங்க்கு சேவை வரி ரத்து

ரயில் டிக்கெட் ஆன்லைன் புக்கிங்க்கு சேவை வரி ரத்து

webteam

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால் அதற்கான சேவை வரி வரும் செப்டம்பர் மாதம் வரை ரத்து என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளிடம் மின்னனு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களின் சேவை வரியை ஜுன் 30 ஆம் தேதி வரை ஐஆர்சிடிசி ரத்து செய்திருந்தது. இந்நிலையில் சேவை வரி ரத்து செய்ததை, வரும் செப்டம்பர் மாதம் வரை நீடித்துள்ளது. சேவை வரி தளர்வால் ஆண்டிற்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் எனவும், ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 6.30 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.