புதிய 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 pro max என 5ஜி சேவையை பயன்படுத்தக்கூடிய நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் விலை இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் ரூபாயிலிருந்து 81 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 12 , 6.1 அங்குல திரையுடனும், ஐபோன் மினி 5.4 அங்குல திரையுடனும் இருக்கும். ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ அக்டோபர் 23ஆம் தேதி முதலும், ஐபோன் மினி மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் நவம்பர் 13ஆம் தேதி முதலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி போன்களுடன் சார்ஜர்கள் வழங்கப்படாது என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் மினி என்ற ஒலிபெருக்கியும் சுமார் 7,500 ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.