வணிகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

JustinDurai
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கணிசமான இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 147 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 18 ஆயிரத்து 63 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், அதிகளவாக ஐசிஐசிஐ வங்கி 2 சதவிகிதம் சரிந்து காணப்பட்டது. தொடர்ந்து டாடா ஸ்டீல், ஐடிசி, எஸ்பிஐ, டைட்டன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் விலை குறைந்து காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததே பங்குச் சந்தைகள் குறைய காரணமாகக் கூறப்படுகிறது.