வணிகம்

அடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம்

webteam

இந்திய பங்குசந்தை இன்றும் தனது சாதனை பயணத்தைத் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றத்துடன் 36,283 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 11,130 என்ற நிலையிலும் தங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டன. 

இந்திய பங்குசந்தையின் தொடர் முன்னேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கை உடனடி காரணமாகச் சொல்லப்படுகிறது. அதில் கணிக்கப்பட்டிருந்த அடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தைத் தொடும் என்பது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இன்னும் இரு நாள் இடைவெளியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றொரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பொருளாதாரத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் அடுத்த கட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்பது பெருமுதலீட்டாளர்கள் பலரது எதிர்பார்ப்பு. எனினும், மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது என்பதால், மக்களைக் கவரும் கவர்ச்சி திட்டங்களும் இதில் இடம்பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.