டாலர், ரூபாய்
டாலர், ரூபாய் ட்விட்டர்
வணிகம்

டாலருடன் ஒப்பிடுகையில், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த ரூபாய் மதிப்பு!

Prakash J

இந்திய ரூபாயின் மதிப்பு 79.87ஆக இருந்த நிலையில், தற்போது அதன் மதிப்பு 83.14 அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவிற்கு தற்போது சரிந்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் வரை விநியோகக் குறைப்பை நீட்டிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 90 டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில், டாலருக்கு எதிராக உள்நாட்டு 83.15 ஆகத் தொடங்கியது. அதன் முந்தைய முடிவில் இருந்து 2 பைசா குறைந்தது.

நேற்று, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து 83.13 ஆக இருந்தது. முன்னதாக, ஆகஸ்ட் 21ஆம் தேதி ரூபாய் மதிப்பு 83.13 என்ற நிலையை அடைந்துள்ளது.

இதற்கிடையில் ஆறு நாணயங்களின் எதிராக கிரீன்பேக்கின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு 0.01 சதவீதம் குறைந்து 104.85 ஆக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 1200க்கும் மேல் சரிந்து உள்ளதால் விற்பனை மற்றும் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு 7 சதவீதம் அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், இந்திய பங்குசந்தையில் கடந்த சில வர்த்தக நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்ததே ஆகும். குறிப்பாக, அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் இடைநிறுத்தம் மற்றும் வட்டி விகித உயர்வை மாற்றி அமைத்தல் போன்ற காரணங்களினால் பொருளாதார தரவின்படி அமெரிக்க பத்திரங்களின் விலையானது 15 ஆண்டுகள் உச்சநிலைக்குச் சென்றுள்ளது.

அமெரிக்க டாலர்

ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் 5% புள்ளிகளுக்கு மேல் அதிகரித்ததால் மந்த நிலைக்கு காரணமாகியது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்காக அதிக வட்டி விகிதங்கள் தொடரப்படும் என்று அமெரிக்கா மத்திய வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பானது சரிய தொடங்கியது. இதனுடைய தாக்கம் ரூபாயில் குறைந்த சந்தை உணர்வு ஆகியவை இந்திய நாணயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.