வணிகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றதுடன் வர்த்தகம்

jagadeesh

மூன்று நாட்கள் சரிவிற்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.

காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 657 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 773 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்.சி.எல்.டெக், டைட்டன், டெக் மஹிந்தரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. சர்வதேசச் சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.