இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கணிசமான உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 679 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 136 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 768 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளும் உயர்ந்து வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.