வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது
2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். வருமான வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில் அது தவறான தகவல் எனவும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைவதாக வருமான வரித்துறை தெளிவுபட கூறியுள்ளது. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்றுக்குள் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.