நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு இன்றுடன் முடிவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் நலன் கருதி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மேற்கு தாம்பரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கணக்கு தாக்கல் செய்வோர் நலன் கருதி வருமான வரிக்கணக்கு தாக்கல் வசதி கொண்ட வங்கிக் கிளைகள் இன்று இரவு 8 மணி வரைக்கும் திறந்திருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.