வணிகம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது - மத்திய அரசு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது - மத்திய அரசு

Veeramani

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொரோனா காரணமாக டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 20 லட்சம் பேர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தமாக 5 கோடியே 62 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் கால அவகாசம் அளிக்கப்படாது என மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.