வணிகம்

ரூ.20 லட்சம் மேல் பண பரிவர்த்தனை செய்கிறீர்களா? இனி இது கட்டாயம்!

Veeramani

வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது

வங்கி கணக்கில் ஓராண்டில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ பான் எண் அல்லது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இந்த விதிகள் வரும் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் வங்கி கணக்குகளுக்கு மட்டுமல்லாது அஞ்சலகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கு பான் எண் கட்டாயம் என்கிற நடைமுறை தற்போது அமலில் உள்ளது. பான் எண் இல்லாமல் பெரிய தொகையை பரிவர்த்தனை செய்வோரை வரிவரம்பிற்குள் கொண்டுவரும் முயற்சியாகவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நிதித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.