வணிகம்

ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி டெபிட் கார்டு வேண்டாம் - ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதி!

ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி டெபிட் கார்டு வேண்டாம் - ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதி!

webteam

டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை தங்களது வங்கி ஏடிஎம்களில் ஐசிஐசிஐ அறிமுகம் செய்துள்ளது

ஐ-மொபைல் (iMobile) செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் ஒருநாளில் அதிகப்பட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கியின் 15 ஆயிரம் ஏடிஎம்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு எடுத்து வர மறந்து விட்டாலோ அல்லது அதை பயன்படுத்த விரும்பாவிட்டாலோ இந்த வசதி மூலம் பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி சாத்தியப்படுத்தியுள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமென்றால் பயனாளர்கள் தங்கள் செல்போனில் ஐசிஐசிஐ வங்கியின் செயலியான 'iMobile'-ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி?

  • iMobile செயலிக்குள் செல்ல வேண்டும்
  • ‘Services’ ஆப்ஷனை க்ளிக் செய்து பின்னர் ‘Cash Withdrawal at ICICI Bank ATM’என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • எவ்வளவு பணம் எடுக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டு வங்கிக் கணக்கை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஏதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை தற்காலிகமாக இட வேண்டும். பிறகு submit கொடுக்க வேண்டும். அதன் பின்னர் செல்போனுக்கு OTP வரும்.
  • ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்க்கு சென்று cardless cash withdrawal முறையை தேர்வு செய்ய வேண்டும்
  • பிறகு செல்போன் எண்ணை பதிவிட்டு செல்போனுக்கு வந்த OTPஐ பதிவிட வேண்டும். பிறகு நாம் ஏற்கெனவே பதிவிட்ட தற்காலிக நான்கு இலக்க எண்ணை பதிவிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.