நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, வீட்டுக் கடன் வட்டியை 0.45 சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. இதன்மூலம், 9.1 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவிகிதம் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்திற்கான கடனுக்கான வட்டி விகிதம் 8.9 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தகப் போட்டி காரணமாக ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், பஞ்சாப் நேஷனல், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. 0.15 சதவிகிதம் முதல் 0.7 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
கடன் வட்டியைக் குறைக்குமாறு பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி வலியுறுத்திய நிலையில், வங்கிகள் அடுத்தடுத்து வட்டிக் குறைப்பை அறிவித்து வருகின்றன.