வணிகம்

விரைவில் வெளியாகவுள்ள ஹூண்டாய் Alcazar எஸ்.யூ.வியின் சிறப்பம்சங்கள்!

விரைவில் வெளியாகவுள்ள ஹூண்டாய் Alcazar எஸ்.யூ.வியின் சிறப்பம்சங்கள்!

EllusamyKarthik

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள ஹூண்டாய் செவன் சீட்டர் காரான  Alcazar எஸ்.யூ.வியின் சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ளன. எஸ்.யூ.வி கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் சக கார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாளராக இந்திய சந்தையில் உள்ளது. இந்நிலையில், Alcazar எஸ். யூ. வியும் சந்தையில் மற்ற நிறுவனங்களின் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை காட்டிலும் செவன் சீட்டர் கேட்டகிரியில் இந்த காரின் விலை மலிவாக இருக்கும் என தெரிகிறது. 

சர்வதேச அளவில் இந்த கார் அறிமுகமாக உள்ள நிலையில் ஹூண்டாய் நிறுவனம் Alcazar எஸ். யூ. வியின் டிசைன், இண்டீரியர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் பார்ப்பதற்கு ஹூண்டாயின் கிரேட்டா போலவே இருக்கிறது. இருப்பினும் ரியர் சைடில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இண்டீரியர் டிசைனிலும் கிரேட்டாவை போலவே உள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் சிக்ஸ் மற்றும் செவன் சீட்டர் என இரண்டு வேரியன்டில் இந்த கார் கிடைக்கும் என தெரிகிறது. 

போஸ் சவுண்ட் சிஸ்டம், வொயர்லெஸ் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, டிரைவிங் மோட் மாற்றும் வசதி மதிரியானவை இடம் பெற்றுள்ளன. செவன் சீட்டர் காரில் கூடுதலாக சன் ரூஃப் இடம் பெற்றுள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஷிப்ட் வசதிக்கான ஆபிஷன்களும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது ஹூண்டாய். இரண்டு வகையான பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரேயொரு டீசல் யூனிட் மாடலிலும் இந்த கார் வெளிவர உள்ளது.