வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6 சதவிகிதமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போதுதான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டு வட்டிக்குறைப்பில் தற்போதைய விகிதமே மிகவும் குறைவானது. இதன் அடிப்படையில் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒரு கோடி ரூபாய்க்கு கீழான சேமிப்புத் தொகைக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.