Adani | Hindenburg research Adani
வணிகம்

அதானி குழுமத்துக்கு ஜாக்பாட்டா... 'முடிச்சு விட்டீங் போங்க' ஹிண்டன்பெர்க்..!

ஹிண்டன்பெர்க் முடிவால் அதானி பங்குகள் மீண்டும் உயர்வா?

karthi Kg

அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் ரிசர்ச்சை மூடுவதாக அறிவித்திருக்கிறார் அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன். ஷார்ட்-செல்லிங்கிற்கு பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் மற்றும் அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் பில்லியன் கணக்கான டாலர்களை அழித்தது குறிப்பிட்டத்தக்கது.

ஹிண்டென்பெர்க்

கடந்த சில ஆண்டுகளாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கியது. 2023 முதல் வெளியிடப்பட்ட அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரர் அதானிக்கு பில்லியன் கணக்கான டாலர் இழப்பை ஏற்படுத்தியது. அனைத்து குற்றச்சாட்டுகளும் அதானி மற்றும் அவரது நிறுவனங்களால் மறுக்கப்பட்டன. ஆனால், பங்குச் சந்தையில் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தான் முதல் முறையாக அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக அறிவித்தது ஹிண்டன்பெர்க். அறிக்கை வெளியான மூன்று நாட்களில், அதானி குழுமம் கிட்டத்தட்ட 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது. அடுத்த ஐந்து வாரங்களில், அதானி குழும பங்குகள் 65% மேல் வீழ்ச்சி கண்டது.

கடந்த ஆண்டு மீண்டும் அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது ஹிண்டன்பெர்க். மீண்டும் சிறிய அளவில் ஆட்டம் கண்டது அதானி குழுமம். ஒவ்வொரு முறை ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிடும்போதும், அதை முற்றிலுமாக நிராகரித்துவந்தார் கௌதம் அதானி.

இப்போது தன் நிறுவனத்தை மூடுவதாக ஆண்டர்சன் அறிவித்திருக்கும் நிலையில், மீண்டும் அதானி குழுமம் பங்குச் சந்தையில் புதிய உச்சங்களை தொடும் என அதானி பங்குதாரர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.