வணிகம்

அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரி யார் தெரியுமா?

webteam

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.வாக இருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் ரூ.130 கோடி (16.5 மில்லியன் டாலர்) பெற்றிருக்கிறார். இதில் இரு ஆண்டுகால ஊக்கத்தொகை 12.5 மில்லியன் டாலரும் அடங்கும்.

இந்த ஊக்கத்தொகை காரணமாக கடந்த நிதி ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி தலைமைச் செயல் அதிகாரியாக விஜயகுமார் இருக்கிறார். இத்தனைக்கும் கடந்த நிதி ஆண்டில் இவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இரண்டாம் இடத்தில் விப்ரோ தலைமைச் செயல் அதிகாரி இருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் இவரது சம்பளம் ரு.79.8 கோடி. மூன்றாம் இடத்தில் இன்ஃபோசிஸ் சி.இ.ஒ சலீல் பரேக் இருக்கிறார். இவரது சம்பளம் 71 கோடி ருபாய். நான்காம் இடத்தில் டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் இருக்கிறார். இவரது சம்பளம் ரூ.25.77 கோடியாக இருக்கிறது.

- வாசு கார்த்தி

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து வெளியேறும் பேடிஎம்? என்ன காரணம்?