வணிகம்

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் வாடகை வருமானத்திற்கு ஜிஎஸ்டி!

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் வாடகை வருமானத்திற்கு ஜிஎஸ்டி!

webteam

வர்த்தகத்திற்காக இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு ரூ.20 லட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் பெறுவோர் ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்த வேண்டும் என  வருவாய்த்துறை செயலாளர் அஹஸ்முக் தியா தெரிவித்துள்ளார். 
வீட்டுக் குடியிருப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 20 லட்ச ரூபாய் வரையில் ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 
இதுகுறித்து ஹஸ்முக் அதியா கூறுகையில்’ ஏற்கெனவே வீட்டுக் குடியிருப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஜிஎஸ்டியில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வணிக ரீதியாக கட்டத்தையோ இடத்தையோ வர்த்தகத்திற்காக இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு ரூ.20 லட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் பெறுவோர் ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்த வேண்டும். அவர்கள்  அனைவரும் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்ய வேண்டும். 20 லட்சத்திற்கும் குறைவாக வாடகை வருமானம் பெறுவோர் நேரடி வரி விதிப்பின் கீழ் தங்களது வருமானத்தைக் காட்டி வருமான அளவிற்கு ஏற்ற வரியைச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.  பழைய வரி விதிப்பின் கீழ் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் இருக்கும் நிலையில், புதிய ஜிஎஸ்டி வரித்தளத்தில் தற்போது 69.32 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அவர்களில் 38.51 லட்சம் பேர் தங்களது முழுமையான பதிவு மற்றும் சான்றிதழை பெற்றுள்ளனர். 
மீதமுள்ள 30.8 லட்சம்பேருக்கு குறுந்தகவல்கள் மூலம் இ-மெயில் மூலமும் பதிவு செய்து கொள்ளுமாறு தகவல் அனுப்பபட்டுள்ளது. அவர்களில் 5.5 லட்சம் பேர் கடந்த ஜூன் 25 வரை பதிவு செய்துள்ளனர் என ஜிஎஸ்டி நெட்வொர்க் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.   
இந்த அறிவிப்பின்படி படி மாதம் 1.7 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் அனைவரும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.