ஜிஎஸ்டி முறையின்கீழ் முதலாவது மாத வரிக் கணக்கை வர்த்தக நிறுவனங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றிரவுடன் முடிவடைந்தது.
ஜிஎஸ்டி முறை கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்கீழ் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட 48 லட்சம் வரி செலுத்துவோர் இணைய தள வாயிலாக பதிவு செய்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களுக்கான மாதாந்திர வரிக் கணக்கு தாக்கலுக்கு ஜிஎஸ்டி அமலானதன் காரணமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. அதன்படி, நேற்றிரவு வரை சுமார் 30 லட்சம் வரிக் கணக்குகள் தாக்கலாகியுள்ளன.