வணிகம்

ஜிஎஸ்டி குழப்பங்களை தீர்க்க 9 பிரத்யேக ஆப்ஸ்

ஜிஎஸ்டி குழப்பங்களை தீர்க்க 9 பிரத்யேக ஆப்ஸ்

webteam

ஜிஎஸ்டி குழப்பங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் விதமாக புதிய 9 மொபைல் ஆப்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும், ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமலானது. ஜிஎஸ்டி குறித்த குழப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தெளிவான புரிதல் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் குழப்பமடைந்துள்ளனர். எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்னும் குழப்பமும் மிகுந்து வருகிறது.


ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர்

மத்திய அரசு நேற்று புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த ஆப் மூலம் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய சுங்கத்துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் இந்த ஆப்பை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்குரு

இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, ஏசர் கணினி நிறுவனம், டாலி சாப்ட்வேர் நிறுவனங்கள் இணைந்து ஜிஎஸ்டிக்கு உதவும் வகையிலான ’பிஸ்குரு ’(Tally.ERP 9 Release 6) என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஆப் மூலம் சிறு, குறு வணிகர்கள் வரி விதிப்பு முறைகள் குறித்து அறிந்துகொள்ள முடியும்.

ஜிஎஸ்டி ஸ்டார்டர் கிட்

ஜியோ நிறுவனம் தொழிலதிபர்களுக்காக பிரத்யேகமாக ஜியோ கிட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வரி மற்றும் இதர பில்லிங் செலுத்துவதற்கு இந்த கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,999 ரூபாய்க்கு, ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகள், 24 ஜிபி, ஜியோவின் ஜிஎஸ்டி மென்பொருள் தீர்வு மற்றும் வரி கட்டும் வசதிகளும் இந்த கிட்-ல் வழங்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வித் PwC 

முன்னணி ஆலோசனை நிறுவனமான PwC , ஜிஎஸ்டி வித் PwC (GST with PwC)  என்ற ஆப்- பை உருவாக்கியுள்ளது. இதில் GST தாக்கம், புதிய நடைமுறைகள் மற்றும் புதிய வரி விதிமுறைகள் மற்றும் வல்லுனர்களின் கருத்துக்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்

ஒன் சொல்யூஷன்

சுவிதா என்பவர் ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களை அறிந்து கொள்ள ஒன் சொல்யூஷன் (One Solution) எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மென்பொருளின் உதவியுடன் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி கோச்

வழக்கறிஞரான அஜய் ஜக்காவால் ஜிஎஸ்டி கோச் (GST Coach) எனும் ஆப்பை உருவாக்கியுள்ளார். இதில் ஜிஎஸ்டி விதிகள் அடங்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சோஹோ புக்ஸ்

சோஹோ புக்ஸ் (Zoho Books)  மூலம் பயனர்கள் பொருள்களின் விலை விவரங்களை அறிந்து கொள்ளவும், வங்கிக் பரிவர்த்தனைகளை சரிசெய்யவும், சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. மொபைல், கணினி என அனைத்து சாதனங்களிலும் இந்த ஆப்பை பயன்படுத்த முடியும்.

டெலோய்ட் இந்தியா ஜிஎஸ்டி

டெலோய்ட் எனும் ஆலோசனை நிறுவனம் டெலோய்ட் இந்தியா ஜிஎஸ்டி (Deloitte India GST) எனும் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்பு பற்றிய அனைத்து செய்திகளும் கருத்துக்களும் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே வருகிறது. இதன் மூலம் வரி விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கிளியர் டாக்ஸ் ஜிஎஸ்டி

Tax-filing website cleartax.in என்ற தளத்தில் ஜிஎஸ்டி பற்றிய முழு தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய வணிகர்களுக்கு இந்த GST கால்குலேட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களையும் இந்த இந்த தளத்தில் அறிந்து கொள்ளலாம்