ஜி.எஸ்.டி குழப்பங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் விதமாக புதிய மொபைல் ஆப் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும், ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி அமலானது. ஜி.எஸ்.டி குறித்த குழப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தெளிவான புரிதல் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் குழப்பமடைந்துள்ளனர். எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்னும் குழப்பமும் மிகுந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த ஆப் மூலம் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய சுங்கத்துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் இந்த ஆப்பை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.