வணிகம்

ஜிஎஸ்டி ஜூலை வசூல் ரூ.94,000 கோடி - நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி ஜூலை வசூல் ரூ.94,000 கோடி - நிதி அமைச்சகம்

webteam

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 94 ஆயிரம் கோடியைக் கடந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜுலை மாதத்தில் 44 லட்சம் வர்த்தகப் பதிவுகளில் இருந்து 94,000 கோடியை கடந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகை வரியாகக் கிடைத்துள்ளதாகவும், கடந்த வாரத்துக்கு முன்பு வரை 38 லட்சம் பதிவு செய்த வர்த்தகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்த நிலையில், ஒரு வாரத்தில் கூடுதலாக 6 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்ததாக  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.