வணிகம்

3.5 சதவீத பங்குகளை வெளியிட எல்.ஐ.சி. இயக்குநர் குழு அனுமதி

webteam

எல்.ஐ.சி. நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விலக்கிகொள்ள இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

முன்னதாக 5 சதவீத பங்குகளை விலக்குகொள்ள நிறுவனம் திட்டமிட்டிருந்து. ஆனால் சந்தையில் இருக்கும் நிச்சயமற்ற சூழல் மற்றும் முதலீட்டாளர்களிடம் ஆர்வம் இல்லாத காரணத்தால் 5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 3.5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.21,000 கோடி திரட்ட நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

மே முதல் வாரத்தில் ஐபிஓ வெளியாகும் என தெரிகிறது. வரும் 27-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. பங்கின் விலை, பணியாளர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றே வெளியாகும் என தெரிகிறது.