வணிகம்

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11 ஆயிரம் கோடி!

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11 ஆயிரம் கோடி!

webteam

நாட்டின் பல்வேறு வங்கிகளில் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய், கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் 64 வங்கிகளில் சுமார் 3 கோடி கணக்குகளில் உள்ள இந்த பணம் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டு முடிந்ததும் அடுத்த 30 நாட்களில், அதாவது ஜனவரி மாதத்துக்குள் ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் இந்த தகவலை அளிப்பது கட்டாயம். அதன்படி, கடந்த ஜனவரி இறுதியில் 64 வங்கிகள் அளித்த தகவலின்படி, சுமார் 3 கோடி பேரின் கணக்குகளில் உரிமை கோராமல் 11 ஆயிரத்து 302 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது. 
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் அதிகபட்சமாக 1, 262 கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மற்ற 20 பொதுத் துறை வங்கிகளில் 8 ஆயிரத்து 290 கோடி ரூபாயும், 17 தனியார் வங்கிகளில் 789 கோடி ரூபாயும் கேட்பாரற்றுக் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.