சென்னையில் வெள்ளி விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலையும் ஒரு சவரன் மீண்டும் 73 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் விலை உயர்ந்து 9 ஆயிரத்து 140 ரூபாய்க்கும், ஒரு சவரன் 520 ரூபாய் விலை அதிகரித்து 73 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் 4 ரூபாய் உயர்ந்து 125 ரூபாய்க்கு விற்பனையாகிறது.