அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக வரும் ஜூன் மாதத்துக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை 8,700 ரூபாய் முதல் 9,000 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக ஐசிஐசிஐ பேங்க் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலே தொடர்ந்தால் இந்தாண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்க விலை 9 ஆயிரத்து 600 ரூபாய் வரை உயரும் என்று அவ்வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது 1 கிராம் 22 கேரட் தங்க விலை 8,360 ரூபாயாகவும் 24 கேரட் தங்க விலை 9,120 ரூபாயாகவும் உள்ளது. அமெரிக்கா மீது அதிகம் வரி விதிக்கும் நாடுகள் மீது அதே அளவு பதில் வரியை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக தங்கம் விலை ஏற்றம் காண்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.