தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து, 1,00,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 4000 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இறக்கத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது.
இன்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1120 ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 1,00,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால், மீண்டும் ஒரு லட்சம் என்னும் இலக்கை தொட்டிருக்கிறது. கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
“தங்கம் விலை உச்சம் தொடும் போது, சிலர் லாபத்தை விற்பார்கள் (profit booking) செய்வார்கள். அதனால் , கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்தது. தற்போது மீண்டும் உயர்ந்திருக்கிறது. “ எகிறார் நகை வணிக சங்கத்தின் ஜெயந்திலால் சலானி.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்திருக்கிறது. கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் அதிகரித்திருக்கிறது. வெள்ளி கிலோவுக்கு 4000 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கமும் , வெள்ளியும் அடுத்த சில தினங்களுக்கு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.